விழுப்புரம் முதல் தஞ்சை வரையிலான இரட்டைவழி ரயில் பாதை பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை சந்திப்பில் நடைபெறும் அம்ரித் பாரத் பராமரிப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் எம்.பி., ஆர்.சுதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.என்.சிங், காரைக்கால் – பேரளம் இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையில் நடைபெற்ற சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.