மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலகிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்குக் குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.