ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஏழாம் வகுப்பு மாணவி கண்மாய் நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகள் யாழினி, புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
மாலை நேரத்தில் தனது தோழிகளுடன் யாழினி, கண்மாய்க்குச் சென்று குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி யாழினி உயிரிழந்தார்.
மகளைப் பறிகொடுத்ததால் கதறி அழுத தாய் மற்றும் உறவினர்களால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.