கர்நாடகாவில் இன்று மராட்டிய அமைப்பினரைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
பெலாகவியில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பேருந்து நடத்துநர், மராட்டிய அமைப்பினரால் தாக்கப்பட்டார்.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாகக் கர்நாடகாவில் இன்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன.
இருப்பினும் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் வசதிக்காகக் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.