மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு அரினா சபலென்கா முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, பல்கேரியாவின் விக்டோரியா டோமோவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6 க்கு 3, 6 க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் விக்டோரியாவை வீழ்த்தினார். நாளை நடைபெறும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சபலென்கா, ருமேனியாவின் எலெனாவுடன் மோதவுள்ளார்.