கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக, தென்னக ரயில்வேவின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் எந்தெந்த பணிகள் நடைபெற வேண்டும் என்பது தொடர்பாக வரைபடங்கள் தயாரித்து பொதுமேலாளர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதனைப் பார்வையிட்ட தென்னக ரயில்வே பொதுமேலாளர் RN சிங், அதில் சிலவற்றைத் திருத்தம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடைக்கால சிறப்பு ரயில்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்துத் திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.