பீகார் மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநிலங்களின் சிறப்பம்சங்கள் அடங்கிய கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பீகார் மாநிலத்தின் பிரபல உணவு மற்றும் தானிய வகைகள், தலைவர்களின் வரலாறு அடங்கிய புகைப்படங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ஓவியங்களைக் கண்டுகளித்ததோடு, அதற்கு வண்ணம் தீட்டியும் மகிழ்ந்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பீகார் மாநிலம் பாரதத்தின் ஆன்மிக, அறிவுசார் மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் மையமாக விளங்கி, அதன் நாகரீக போக்கை வடிவமைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாரதத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பீகார் மற்றும் தமிழ்நாடு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தொடர்பைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.