பிரபல டிவிட்டர் நிறுவனத்தின் அடையாளமான நீலப் பறவை சின்னம் ஏலத்தில் சுமார் 35 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டிவிட்டர் நிறுவன அலுவலகத்தை அலங்கரித்த நீலப் பறவை சின்னம், பிரபல ஏல நிறுவனம் மூலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அச்சின்னம் 34 ஆயிரத்து 375 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டது.