பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் உடல்நலக் குறைவால் காலமானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான ஜார்ஜ் ஃபோர்மேன், உடல்நலக் குறைவு காரணமாக ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் தனது 76-வது வயதில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மற்றொரு குத்துச்சண்டை ஜாம்பவானான மைக் டைசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.