அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டுச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தன.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் அந்நாட்டின் உள்ளூர் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும், மாணவர்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் அவர்களுக்கு இந்தியத் தூதரகங்கள் உதவும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.