மரக்காணம் கள்ளச்சாரய வழக்கில் கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்த மரக்காணம் சட்ட ஒழுங்கு காவலர்கள் 6 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து டிஐஜி திஷா மித்தல் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய மரக்காணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், காவலர்கள், மதுவிலக்கு போலீசார் என பத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்த சட்டம் ஒழுங்கு காவலர்கள் செந்தில் குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் ஆகிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் உத்தரவிட்டுள்ளார்.