மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டயர் வெடித்ததில் சரக்கு லாரி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
மதுரை – திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு மணல் பவுடர் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. குலசேகரன் கோட்டை பிரிவில் சென்றபோது திடீரென டயர் வெடித்ததில் தீப்பற்றி லாரியின் அனைத்து பகுதிகளிலும் பரவியது.
இதனையறிந்து லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.