கோடை சீசனையொட்டி உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதற்கான தேதியை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் தொடங்க உவள்ளது. இதனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் மலை ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, குன்னூர் முதல் உதகை வரையில் வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.