சிவகங்கை அருகே ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
சிவகங்கையில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பின. விவசாய தேவைக்கு தண்ணீர் பயன்படுத்தியதை தொடர்ந்து நாகப்பன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியது.
இதனால் கண்மாயில் உள்ள மீன்களைப் பிடிக்க கிராமத்தினர் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்து அறிவித்தனர். இதனைதொடர்ந்து பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து, கட்லா, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்துச் சென்றனர்.
இதேபோல் காளாப்பூர் அய்யனார் கோயில் சுணை கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நசூரக்குடி, கள்ளம்பட்டி, புதுப்பட்டி, மூவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீன்களை பிடித்தனர். விரால், கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.