கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக 20-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த சிறுத்தனுர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த போது இடதுபுற டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அருகில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.