தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் குறைகளை கேட்டறியுமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துகளை அறிய, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.