ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் இஷான் கிஷன் 106 ரன்களும், டிராவிஸ் ஹெட் 67 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கிய ராஜஸ்தான் வீரர் ஆர்ச்சர், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.