கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குளிர்பானம் குடித்து மயக்கமடைந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புளியம்பட்டி அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்கள், பள்ளியின் எதிரே உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 3 மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, கௌதம் என்ற மாணவர் ஆபத்தான நிலையில் உள்ளதால், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.