கனடாவில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுமெனப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 51-வது மாகாணமாகக் கனடாவை இணைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
மேலும், ஜஸ்டின் ட்ரூடோவை, கனடா மாகாணத்தின் ஆளுநர் என்றே அழைத்து வந்தார். இந்த சூழலில், புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். தேர்தல் குறித்துப் பேசிய அவர், அடுத்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுமென எனக் கூறியுள்ளார்.