மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் உள்ள பாக்கு தோட்டத்தின் காம்பவுண்ட் கேட்டை உடைத்து பாகுபலி யானை சேதப்படுத்தியது.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், ஓடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் பாகுபலி யானை நடமாடி வருகிறது.
இந்நிலையில், பாக்கு தோட்டத்தின் முன்பக்க இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற யானை, சில பாக்கு மரங்களைச் சேதப்படுத்தி விட்டு அருகிலிருந்த மற்றொரு தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.