இத்தாலி நாட்டில் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் ஜெனோவா நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டோர்பெல்லா ஆறு நிரம்பிக் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதில், ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதேபோல் பிரேசிலில் உள்ள பியாவி பகுதியிலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.