சென்னையில் தலைமைச் செயலகம் முன்பு, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
வீடு கட்டி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சென்னை, பெரியமேடு பி.வி.தெருவை சேர்ந்த பெண்கள் தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
















