யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் எனக் கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்குள் நுழைந்து சாக்கடை மற்றும் மனிதக் கழிவை கொட்டி அசுத்தம் செய்ததாக சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். மேலும், வீட்டில் இருந்த தனது தாயை அவர்கள் மிரட்டியது தொடர்பான காட்சியையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாய் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விருப்பமில்லை என்பதால் சவுக்கு மீடியாவை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார்.