நெல்லை பேட்டை ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பட்டியலின மாணவர் படுகாயமடைந்தார்.
நெல்லை மாவட்டம் பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஐடிஐ-யில் பள்ளிமடை பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே ஐடிஐயில் படிக்கும் மாணவர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மாணவர், பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.