நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் எம்.பி.க்களுக்கான மாதச்சம்பளம் ஒரு லட்சத்தில் இருந்து ஒரு லட்சத்து 24 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளது.
தினக்கூலி 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், மாதாந்திர ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 31 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வானது 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.