ராபின்ஹுட் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
நிதின், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் 28-ஆம் தேதி வெளியாகிறது. இதில் டேவிட் வார்னரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக ரசிகர்கள் கொடுத்து வரும் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.