எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது .
விஜய்யின் 69-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.