2467 கோடி ரூபாய் செலவில் சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹூல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தவர்,
2467 கோடி ரூபாய் செலவில் சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இரண்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தின் கீழ், ஒரு புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகளிலிருந்து 30 மில்லியனாக உயர்த்தியுள்ளது. இந்த முனையம் 08.07.2023 முதல் செயல்பட்டு வந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் கட்டம் 3வது முனையத்தின் வளர்ச்சியை உள்ளடக்கியது, விமான நிலையத்தின் திறனை ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளாக மேலும் இது மேம்படுத்துகிறது. இந்த கட்ட பணிகளை மார்ச் 2026-ல் முடிக்க திட்டமிடப்படுள்ளது எனத் தெரிவித்தார்.