சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் பெண் பயிற்சி மருத்துவர் பணி முடிந்து விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருந்து துணியை முகத்தில் வைத்து அழுத்தி மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். அந்த பயிற்சி பெண் மருத்துவர் கூச்சலிட்டதால் அனைவரும் வெளியே வந்த நிலையில், மர்ம நபர் தப்பியோடினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.