சென்னை எண்ணூர் மீனவ கிராமத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த காளி சிலை அகற்றப்பட்டது.
நெட்டு குப்பம் மீனவ கிராமத்தில் வசிக்கும் கார்த்திக் என்பவர், தனது வீட்டிற்குள் 4 அடி உயரம் கொண்ட காளி சிலையை வைத்து மாந்திரீகம் செய்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த புகாரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் காளி சிலை அகற்றப்பட்டு, திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இந்த சிலை, அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று வட்டாட்சியர் சகாய ராணி தெரிவித்துள்ளார்.