தக்கலை அருகே உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததாதல் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முளகுமூடு குமனாவிளை சாலையில் உயர் மின் அழுத்தக் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. தீப்பொறிகள் பறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மின்கம்பி அறுந்து விழுந்தபோது அவ்வழியாக யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
மின்கம்பி அறுந்து விழுந்ததற்கு அணில்தான் காரணம் என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.