நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில், விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சூழலில், 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு டிஜிபி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.