கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து பாகலூர் செல்லும் சாலை 2 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகக் காட்சியளித்த நிலையில், போக்குவரத்து காவலர்களின் முயற்சியால் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், அந்த சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. ஓசூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சத்யா உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்களிடம் பேசி பாகலூர் சாலையில் சிமெண்ட் கலவையை கொட்டி தற்காலிகமாகச் சீரமைத்தனர்.