சேலம் மாவட்டம், வாடிப்பாடி அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேளூர் பேரூராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தும்பல் மற்றும் கருமந்துறை கல்வராயன் மலைக்குச் செல்லும் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக மேடையமைத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
3 மணி நேரமாக நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசியபோது பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.