தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் 25 ரூபாய் வரை உயரவுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உட்படத் தமிழகம் முழுவதும் வானகரம், சூரப்பட்டு, பரனூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.
வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப 5 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயருகிறது.