திருமயம் அருகே நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஏ.செட்டிபட்டியில் காமன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் 16 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு வண்டிக்கு 12 கிலோ மீட்டர், சிறிய மாட்டு வண்டிக்கு 9 கிலோ மீட்டர் என எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியைச் சாலையின் இருபுறங்களில் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.