2025-26 ஆம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட் ஒரு லட்சம் கோடி என முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு, தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. முதலமைச்சர் ரேகா குப்தா நிதிநிலையைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது முந்தைய ஆம் ஆத்மி அரசு டெல்லியை வளர்ச்சியடையச் செய்யும் நடவடிக்கைகளில் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டினார்.