கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணையின் மதகு திடீரென திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரி நதி ஆற்றில் பாய்ந்தோடி வீணானது.
ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ் நீர்த்தேக்கத்தின் மதகு கேட் திடீரென திறக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் பாய்ந்தோடி வீணானது.
இதையடுத்து அங்கு விரைந்த காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள், திறந்துவிடப்பட்ட மதகுகளை மூடினர். மதகுகள் எவ்வாறு திறந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.