மியாமி ஓபன் டென்னிஸில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி – பெல்ஜியம் வீரர் ஜிஸோ பெர்க்ஸ் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.