மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சி முன்னணி நிறுவனமாகச் சீனாவை சேர்ந்த ‘பி.ஒய்.டி நிறுவனம் உருவெடுத்துள்ளது.
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. மேலும், சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’ டெஸ்லாவுக்கு கடும் போட்டியாக உருவெடுத்திருப்பதுடன் சீன சந்தைகளில் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சியுள்ளது.