தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் குறித்து மாநிலங்களவை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் தீவிபத்து ஏற்பட்டபோது, கட்டுகட்காகப் பணம் கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 21-ம் தேதி மாநிலங்களவையிலும் விவாதிக்கப்பட்டது. இந்த சூழலில், ஜெ.பி.நட்டா, மல்லிகார்ஜுன் கார்கேவுடன் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆலோசனை மேற்கொண்டார்.