ஜம்மு காஷ்மீரில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஓல்ட் டவுனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.