உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரஸா வாரியம் அல்லது கல்வித் துறையின் கீழ் பதிவு செய்யப்படாத மதரஸாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச எல்லையை ஒட்டியுள்ள நகரங்களில் பதிவு செய்யப்படாத மதரஸாக்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் சுமார் 136 மதரஸாக்கள் சீல் வைக்கப்பட்டன. இதற்கிடையே சீல் வைக்கப்பட்ட மதரஸாக்கள் பெற்ற நிதியுதவி குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.