தென்கொரியாவின் இடைக்கால அதிபரான ஹான் டக் சூவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை, அந்நாட்டின் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில், ராணுவ சட்டத்தை அதிபர் ஹான் அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சில மணி நேரங்களிலேயே அந்த சட்டத்தை அவர் திரும்பப் பெற்றார்.
இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் அவருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அதிபராகப் பொறுப்பேற்ற ஹான் டக் சூவும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த பதவி நீக்கத் தீர்மானத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டவே, இடைக்கால அதிபராக ஹான் மீண்டும் நியமிக்கப்பட்டார்.