ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள 448 காலி பதவிகளுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 133 காலிப் பதவி இடங்களுக்கும் மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 315 காலிப் பதவி இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்குமாறும் தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.