இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
1999-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தில் அவரது மகன் மனோஜ் நாயகனாக அறிமுகமானார். அல்லி அர்ஜூனா, சமுத்திரம், விருமன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்த மனோஜ் பாரதிராஜா 2023-ல் வெளியான ‘மார்கழி திங்கள்’ படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது 48 வயதான மனோஜ் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் அவர், உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.