சென்னையில் அடுத்தடுத்து தொடர் செயின் பறிப்பு ஈடுபட்ட தரமணி அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை அடையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று 7 மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் விமானம் மூலம் தப்ப முயன்ற சூரத், ஜாபர் என்ற இரண்டு வட மாநில கொள்ளையர்களை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் விசாரணையின் போது சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே போலீசாரை தாக்கி விட்டு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜாபர் தப்ப முயன்றதாகவும், அதனால் அவர் சுடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உயர் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.