ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்களும், அதிரடியாக விளையாடிய சஷாங்க் சிங் 44 ரன்களும் விளாசினர். குஜராத் அணி தரப்பில் தமிழக வீரரான சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.