சென்னை மெரினா கடற்கரையில் சிஐஎஸ்எஃப் வீரர்களை கௌரவிக்கும் வகையில் விழா நடைபெற்றது.
கடலோர பாதுகாப்பு குறித்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வீரர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழா மேடையில் பேசிய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்தோனி, நாட்டின் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்கு உள்ளதென தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடரை அனைவரும் கண்டு மகிழுமாறு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மூலமாக சிஐஎஸ்எஃப் வீரர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அளித்துவருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி நடைபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.