கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் அபாயகரமான முறையில் இருசக்கர வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழக – கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களை எச்சரித்த காவல்துறையினர் ஜாமினில் விடுவித்தனர். இந்த நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்கு இளைஞர்கள் மன்னிப்பு கேட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.